தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு குறையாமல் இருந்து வருகிறது.

இன்று 5325 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 5,57.999 ஆகி உள்ளது.

இதுவரை 9.010 பேர் உயிர் இழந்து 5,02,740 பேர் குணம் அடைந்து தற்போது 46,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 980 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 1,58,594 பேர் பாதிக்கப்பட்டு 3,097 பேர் உயிர் இழந்து 1,45,629 பேர் குணம் அடைந்து 9,868 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,327 பேர் பாதிக்கப்பட்டு 528 பேர் உயிர் இழந்து 30,408 பேர் குணம் அடைந்து 2,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 30,800 பேர் பாதிக்கப்பட்டு 531 பேர் உயிர் இழந்து 28,677 பேர் குணம் அடைந்து 1,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.