சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,924 பேர் உயிர் இழந்து 6,67,475 பேர் குணம் அடைந்து தற்போது 30,606 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,95,672 பேர் பாதிக்கப்பட்டு 3,592 பேர் உயிர் இழந்து 1,82,441 பேர் குணம் அடைந்து தற்போது 9639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42,665 பேர் பாதிக்கப்பட்டு 657 பேர் உயிர் இழந்து 40,659 பேர் குணம் அடைந்து தற்போது 1,339 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 41,830 பேர் பாதிக்கப்பட்டு 530 பேர் உயிர் இழந்து 37,600 பேர் குணம் அடைந்து தற்போது 3,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.