தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2708 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,11,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,956 பேர் உயிர் இழந்து 6,71,489 பேர் குணம் அடைந்து தற்போது 29,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,96,378 பேர் பாதிக்கப்பட்டு 3,599 பேர் உயிர் இழந்து 1,83,923 பேர் குணம் அடைந்து தற்போது 8856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42,801 பேர் பாதிக்கப்பட்டு 665 பேர் உயிர் இழந்து 40,897 பேர் குணம் அடைந்து தற்போது 1,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 42,084 பேர் பாதிக்கப்பட்டு 538 பேர் உயிர் இழந்து 37,793 பேர் குணம் அடைந்து தற்போது 3,753 பேர் சிகிச்சையில் உள்ளனர்.