தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரி பட்டியல்

சென்னை

கொரோனா பாதிப்பு மாவட்ட வரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 4058 ஆக இருந்தது.

நேற்று ஒரே நாளில் 771 பேர் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 4829 ஐ எட்டி உள்ளது.

இதில் அதிக பட்சமாகச் சென்னையில் 324 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2328 ஆக உள்ளது.

அரியலூரில் நேற்று  மட்டும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 222 ஆகி உள்ளது.

அரியலூர் மொத்த எண்ணிக்கையில் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.

கடலூரில் நேற்று  95 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 324 ஆகி இரண்டாம் இடத்தில் உள்ளது.

நேற்று  கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை,, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை..