தமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 85 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் இன்று ஒரே நாளில் 1187 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 017 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5, 612 பேர் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர். சென்னையில் மேலும் 1,187 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் 4,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.