சென்னை

மிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,64,989 பேர் பாதிக்கப்பட்டு 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 66,365 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,13,33,206 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 3 பேர் உள்ளனர். இதுவரை  7,64,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 19 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,550 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,251 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,39,532 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 13,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.