சென்னை

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகத் தமிழக பேரிடர் மேலாண்மை மக்களுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

,

தமிழகம் எங்கும் கடந்த 2 நாட்களாக விடாது கனமழை  பெய்து வருகிறது.  இதனால் பல அணைகள் நிரம்பி வழிகின்றன.   அணைகள் மட்டுமின்றி ஏரி போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.  எனவே எந்நேரமும் இவை திறக்கப்படலாம் என  கூறபடுகிறட்ஜு.

இந்நிலையில் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம், “தமிழகத்தில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.   இந்த மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  எனவே பொது மக்கள் கடல், ஆறு ஏரி, குளம் உள்ளிட்ட ஏரிகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளது.

சென்னை நகரிலும்  விடாது மழை பெய்து வருகிறது.  எனவே பழைய கட்டிடங்களுக்கு அருகாமையில் செல்ல வேண்டாம் என ஆணையம் எச்சரித்துள்ளது.    மேலும் அத்தகைய இடங்களில் குடி இருப்போர் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.