தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,741 பேர் உயிர் இழந்து 6,46,555 பேர் குணம் அடைந்து தற்போது 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,91,754 பேர் பாதிக்கப்பட்டு 3,546 பேர் உயிர் இழந்து 1,76,363 பேர் குணம் அடைந்து தற்போது 11,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 41,645 பேர் பாதிக்கப்பட்டு 639 பேர் உயிர் இழந்து 39,336 பேர் குணம் அடைந்து தற்போது 1,670 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 40,374 பேர் பாதிக்கப்பட்டு 526 பேர் உயிர் இழந்து 36,017 பேர் குணம் அடைந்து தற்போது 3,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.