சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,122 பேர் உயிர் இழந்து 6,91,236 பேர் குணம் அடைந்து தற்போது 22,164 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,99,916 பேர் பாதிக்கப்பட்டு 3,651 பேர் உயிர் இழந்து 1,89,074 பேர் குணம் அடைந்து தற்போது 7191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 43,654 பேர் பாதிக்கப்பட்டு 674 பேர் உயிர் இழந்து 41,948 பேர் குணம் அடைந்து தற்போது 1,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 43,252 பேர் பாதிக்கப்பட்டு 557 பேர் உயிர் இழந்து 40,646 பேர் குணம் அடைந்து தற்போது 2,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.