தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியாக் கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

தமிழகத்தில் இன்று 5516 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 5.41.993 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8811 பேர் உயிர் இழந்து 4,86,479 பேர் குணம் அடைந்து தற்போது 46,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிக பட்சமாகச் சென்னையில் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டு 3058 பேர் உயிர் இழந்து 1,42,875 பேர் குணம் அடைந்து தற்போது 9,706 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 32,580 பேர் பாதிக்கப்பட்டு 517 பேர் உயிர் இழந்து 29,607 பேர் குணம் அடைந்து தற்போது 2,456 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவடத்தில் 30,140 பேர் பாதிக்கப்பட்டு 521 பேர் உயிர் இழந்து 27,922 பேர் குணம் அடைந்து தற்போது 1,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.