தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9784 பேர் உயிர் இழந்து 5,64,092 பேர் குணம் அடைந்து தற்போது 46,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 1,72,773 பேர் பாதிக்கப்பட்டு 3,274 பேர் உயிர் இழந்து, 1,57,216 பேர் குணமடைந்து தற்போது 12,283 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 37,150 பேர் பாதிக்கப்பட்டு 571 பேர் உயிர் இழந்து, 33,980 பேர் குணமடைந்து தற்போது 2,599 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 33,303 பேர் பாதிக்கப்பட்டு 560 பேர் உயிர் இழந்து, 31,016 பேர் குணமடைந்து தற்போது 1,727 பேர் சிகிச்சையில் உள்ளனர்.