ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்றதில் விதிமீறல் இல்லை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை:

‘சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

கடந்த 13ந்தேதி சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதை பாஜக அரசியலாக்கி தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது.

அதைத்தொடர்ந்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி  குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கல்லூரி கல்வித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி,  மண்டல இணை இயக்குனர் விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி கோரியிருந்தார்.

விசாரணை அறிக்கையை தொடர்ந்து, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்ற தில் விதிமீறல் இல்லை, இதுகுறித்து ஏற்கனவே முறையான அனுமதிகள் வாங்கப்பட்டு உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.