சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின்  பேரிடர் மற்றும் வருவாய் துறை சார்பில் அரசாணை வெளி யிடப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக மார்ச் 7ம் தேதியிட்டு அரசலாணை வெளியாகி உள்ளது.

அநத அரசாணையில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 விழுக்காடு குறைவாகவே  மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக  தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களும்,, கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 24 வட்டாரங்களும் வறட்சி பாதித்த பகுதிகள் என  அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.