பாஜ சொல்வதையே செயல்படுத்தும் அதிமுக அரசு! காங். கே.ஆர் ராமசாமி
சென்னை,
மத்திய பாரதியஜனதா அரசு சொல்வதைத்தான் தமிழக அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறி உள்ளார்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நிலவி வரும் பல்வேற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
அப்போது கே.ஆர்.ராமசாமி கூறியதாவது,
தற்போதைய எடப்பாடி தலைமையிலான தமிழகஅரச, பாஜக என்ன சொல்கிறதோ அதை மண்டியிட்டு கேட்டு வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அதிமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டம் காரணமாக மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முயற்சி செய்வது வருவதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது என்றும், எடப்பாடி தலைமையிலான அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.