தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலை தற்போது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் இனி 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நிலைமையும் மாற்றப்பட்டு 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.