சென்னை:

த்திவரதரை தரிசனம் செய்ய வரும், பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், அன்னதானத் திற்கு உதவுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

40ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சித்தரும்  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் பசியாற்றும் வகையில், அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்று மாலை தமிழக முதல்வர்,  எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசனம் செய்ததுடன், அந்த பகுதிகளில்ஆய்வு நடத்தியும், பொதுமக்களை சந்தித்தும் பேசினார்.

அதைத்தொடர்ந்து, வெகுநேரம் காத்திருக்கும் பக்தர்களின் பசியைப் போக்கும் வகையில், பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அன்னதானம் செய்ய முன்வருவோர் ‘தேவராஜ சுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம்’ என்ற முகவரிக்கு பணமாகவோ, காசோலையாகவோ அனுப்பலாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.