சென்னை: தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்பது கொரோனாவை தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான விதிமுறைகளாகும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.   அரசு இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது எந்த விதியை பின்பற்ற வில்லையோ அதற்கு தகுந்தாற்போல தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் கடும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவோர் மீது தாக்குதல் நடத்துவது குற்றம் என்றும் சட்டத்தில்  திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.