தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு

சென்னை

மிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

அமைச்சர்கள், சட்டப்ப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 84 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையொட்டி ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆளுநருக்கு நடந்த கொரோனா பரிசோதனை முடிவு இன்று வெளியாகி உள்ளது.

அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா  பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

எனவே தற்போது அவர் சிகிச்சைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி