சென்னை: தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்  கடந்த 2ந்தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது.

அவரது உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில், அவருக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவில், கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.  மேலும் அவர் ஆக்டிவாக நலமுடன் இருப்பதாகவும் கூறி உள்ளது.