ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆளுநர் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆகையால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைகள் முடிந்த நிலையில் அவர் ராஜ்பவன் திரும்பினார். இந் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.