தமிழக ஆளுநர் பன்வாரிலால்  டில்லி பயணம்

 

 

குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டில்லி சென்றுள்ளார்.

நாளை முதல்  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நாட்டில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

வரும் புதன் கிழமை வரை டில்லியில் தங்கவுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: tn-governor-leaves-to-delhi, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை டில்லி பயணம்!
-=-