கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அரசு அனுமதி

சென்னை

நாளை முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டமாக அமலில் உள்ளது.  தமிழகத்தில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தொழிற்சாலைகளியங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது  சென்னையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.   இன்று இந்த நிலையில் அரசு மாறுதலை அறிவித்துள்ளது.

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள 17 தொழிற்பேட்டைஅக்ள் இயங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார்.  இதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது  அந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அவசியம், கடைப்பிடிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் மொத்த ஊழியர்களில் 25% பேரைக் கொண்டு இயங்க வேண்டும்.  குறிப்பாக 55 வயதுக்கு மேல் உள்ள பணியாளர்களை பணிக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்   நகரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்களை அனுமதிக்கக்கூடாது.  அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக் கவசத்துடன் பணிபுரிய வேண்டும்” என உத்தரவு இடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி