கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் வாடி கொண்டிருக்கின்றனர்.
இதனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்ய அனுமதி தர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் FEFSI சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று அரசு போஸ்ட்-ப்ரோடக்ஷன் பணிகள் 11.5.2020 முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)
குரல் பதிவு (Dubbingg) (அதிகபட்சம் 5 பேர்)
கம்ப்யூட்டர் மாற்று விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) (10 முதல் 15 பேர்)
டிஐ (DI) எனப்படும் நிற கிரேடிங் – (அதிகபட்சம் 5 பேர்)
பின்னணி இசை (Re-Recording) – (அதிகபட்சம் 5 பேர்)
ஒலிக்கலவை (Sound Design/Mixing) – (அதிகபட்சம் 5 பேர்)

Post Production பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பனி செய்வதை உறுதி செய்யவேண்டும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.