சென்னை

மார்ச் 25 முதல் மே 17 வரை அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்ததாகக் கருதப்படும் ஏன தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25 முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   ஆயினும் கொரோனா கட்டுக்குள் வராததால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.  அவ்வகையில் இந்த மாதம் 30  ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவுதல் அடிப்படையில் ஊரடங்கு விதிகளைத் தளர்வு செய்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த மார்ச் 25 முதல் மே 17 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் பணிக்கு வராத அரசு ஊழியர்களும் அணிக்கு வந்ததாகவே கருதப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.க்  எனவே விடுப்பு கோரி விண்ணப்பிக்க உள்ள அரசு ஊழியர் இந்த அறிவிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.