சென்னை

வரும் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முகம் மற்றும் ரேகை அடையாளம் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை தடுக்க நாடெங்கும்  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது.   ஆனால் நீட் தேர்வுகளிலும் ஆள்மாறாட்டம் செய்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 7 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.   எனவே இவ்வாறு ஆள்மாறாட்டம் நடைபெறுவதைத் தடுக்க அரசு பல விதிமுறைகளைக் கையாள உள்ளது.

சென்ற முறை நீட் தேர்வின் போது வேறு சிலர் எழுதியதும் மற்றும் மாணவர் சேர்க்கை நேரத்தில் சேர உள்ள மாணவர்கள் வந்து கலந்தாய்வில் கலந்துக் கொண்டதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.   தமிழக அரசு மாணவர் தேர்வுக் குழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% இடங்கள் மற்றும் தனியர் கல்லூரியில் உள்ள அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான மாணார்களைத் தேர்வு செய்கிறது.

இந்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக விற்கப்பட உள்ளது.   கலந்தாய்வு நேரடியாக நடைபெற உள்ளது. இம்முறை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தவறான இருப்பிட சான்றிதழ், மற்றும் அடையாள சான்றிதழ் அளிப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முறைகேடுகளை தவிர்க்க இம்முறை முக அடையாளம், மற்றும் ரேகை அடையாளங்களைத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் சேர்க்கையின் போது பயன்படுத்த  உள்ளதாக தேர்வுக்கு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.