தமிழ்நாடு : 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு அனுமதி

சென்னை

மிழ்நாடு அரசு இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிஅளித்துள்ளது.

                                                             அமைச்சர் அன்பழகன்

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான எஸ் எஸ் என் டிரஸ்ட்  தொழிலதிபர் சிவநாடாரால் உருவாக்கப்பட்டதாகும்.    இந்த நிறுவனம் சிவ நாடார் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க தமிழக அரசிடம் அனுமதி கோரி உள்ளது.

கொடையாளர் கே வி ரமணி உருவாக்கியது நாஸ்காம் என்னும் கல்வி நிறுவனம் ஆகும்.  இந்த நிறுவனம் சாய் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்க அரசிடம் அனுமதி கோரி உள்ளது.

இந்த இரு பல்கலைக்கழகங்களும் சுயநிதி பல்கலைக்கழகங்கள் என்பதால் அரசிடம் இருந்து எந்த ஒரு உதவியும் கேட்கவில்லை.

இதனால் இந்த இரு பல்கலைக்கழகங்களையும் அனுமதிக்கும் தீர்மானத்தை அரசு சார்பில் மேற்படிப்பு கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் சட்டப்பேரவையில் அளித்தார்.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும்  எதிர்க்கட்சியான திமுக தனது முதல்எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த மசோதா தற்போது சட்டப்பேரவையில் அங்கீகரிக்கப்படுள்ளதால் இவை இரண்டும் கல்லூரிகள், மையங்கள் மற்றும் கூடுதல் வளாகங்கள் அமைக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.