சென்னை

மாணவர்களின் சாதி விவரங்கள் வெளியில் தெரிவதால் ஸ்மார்ட் அடையாள அட்டைக்கு அரசு தடை விதித்துள்ளது.

 

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகள் இந்த வருடம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை மூலம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் மாணவர்கள் குறித்த அனைத்து விவரமும் தெரிந்து கொள்ள வசதியாக டிஜிட்டல் அடையாளக் குறியீடு உள்ளது. இதற்கு  ஆங்கிலத்தில் குவிக் ரெஸ்பான்ஸ் கோட் எனப் பெயராகும்.

இந்த அடையாளக் குறியீட்டைக் கொண்டு ஸ்மார்ட் தொலைப்பேசி மூலம் யாரும் மாணவர் குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களில் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும் என்னும் நிலையில் இந்த அடையாள அட்டை உள்ளது.

இது குறித்துப் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். அதனால் இந்த சாதி விவரங்களை மறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதையொட்டி இந்த நடவடிக்கை. முடியும் வரை அடையாள அட்டை பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் இனி இந்த அடையாள அட்டைகளைப் பரிசீலனை செய்யப் பெற்றோர், மாணவர் மற்றும் ஆசிரியருக்கு மட்டுமே அனுமதி கொடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.