குர்குரே மற்றும் லேஸ் பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை

சென்னை

நொறுக்குத் தீனிகளான லேஸ், குர்குரே போன்ற பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுக்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் பால் பாக்கெட் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து பல தின்பண்டங்கள் இத்தகைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.

இவற்றில் புகழ் பெற்ற நொறுக்கு தீனிகளான குர்குரே, லேஸ் போன்றவையும் அடங்கும்.

இந்நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நொறுக்குத் தீனிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

You may have missed