Random image

லலித் மோடி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசின் முடிவு என்ன?

டில்லி

லித் மோடி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு முடிவு எதையும் அறிவிக்காததால் வழக்கு தேக்கம் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன்,  லலித் மோடி மற்றும் ஆறு பேர் மீது கடந்த 2010 ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஒரு புகார் அளிக்கப்பட்டது.   தமிழக காவல்துறையிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரில் லலித் மோடி உள்ளிட்ட அனைவரும் கிரிக்கெட் வாரியம் சார்பாக ஒப்பந்தம் அளித்ததில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது குறித்து மாநில அரசு எவ்வித புகாரும் அளிக்காததால் இந்த வழக்கு விசாரணையை அமலாக்கப் பிரிவினரால் நடத்த முடியாமல் இருந்தது.    இந்நிலையில் சௌரவ் தாஸ் என்னும் ஆர்வலர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாதது ஏன் என கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.   இதற்கு தற்போது மத்திய அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “லலித் மோடி மற்றும் உள்ளவர்கள் மீது தமிழக அரசு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   அந்த மோசடிகள் சென்னையிலும் மும்பையிலும் நடந்ததாக கூறப்படுகிறது.    மகராஷ்டிர அரசின் காலதாமதத்தால் அமலாக்கப் பிரிவு விசாரணையை தொடங்க முடியவில்லை.

மேலும் இந்த புகார் தமிழக காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.   அந்த ஒப்புதலைக் கோரி மத்திய அமைச்சகம் தமிழக அரசை பலமுறை கேட்டுக் கொண்டும் தமிழக அரசு பதில் அளிக்கவில்லை.     அதனால் இந்த வழக்கு முடிங்கி உள்ளது” என கூறப்பட்டுள்ளது.