தமிழ்நாடு : செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்வு

சென்னை

ரசில் தற்காலிகமாக பணி புரியும் செவிலியர்களின் ஊதியத்தை ரூ.7700 லிருந்து ரூ. 14000 ஆக உயர்த்தி முதல்வர் எடப்ப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பல செவிலியர்கள் தற்காலிகமாக பணி புரிந்து வருகின்றனர்.    தங்களுக்கு ஊதிய உயர்வு இந்த் கோரி செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இவர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

நேற்று இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக செவிலியர்கள் மாதம் ரூ.7700 ஊதியத்தில் பணி புரிகின்றனர்.    அரசு மருத்துவமனைகளில்  நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலி ஆகும் போது இவர்கள் பணி நிரந்தரம் ஆக்கப்படுகிறது.

அவ்வாறு நிரந்தரம் ஆக்கப்படும் வரை ரு.7700 மாத ஊதியத்தில் பணி புரியும் தற்காலிக செவிலியர்களின் ஊதியத்தை ரூ.14000 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.   இந்த ஊதிய உயர்வு சென்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து முன் தேதி இட்டு வழங்கப்பட உள்ளது.

இனி இவர்களுக்கு வருடாவருடம் ரூ. 500 ஊதிய உயர்வு வழங்கப்படும்.   அத்துடன் இவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி,  தொழிலாளர் அரசு காப்புறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்த்ப்பட உள்ளது.   இந்த உத்தரவின் மூலம் தமிழகத்தில் சுமார் 12000 செவிலியர்கள் பயன்பெற உள்ளனர்” என அறிவித்துள்ளார்.