மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை

ன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.  அதன் அடிப்படையில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடை செய்யப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இன்று மக்கள் ஊரடங்கு எனப்படும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  அதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் வீட்டினுள் அடைந்து கிடப்பதால் ஊரே வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில் தமிழக அரசு இந்த மக்கள் ஊரடங்கை நாளைக் காலை 5 மணி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.