ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு!

சென்னை,

ல்லிக்கட்டு குறித்த வழக்கில் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காரணமாக தமிழக அரசு இன்று மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

மிழக இளைஞர்களின் கடுமையான போராட்டம் காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

மேலும் இந்த அவசர சட்டத்துக்கு யாரும் தடை கோரிவிடக்கூடாது என உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாக காளைகளை, காட்சிபடுத்தும் பட்டியலில் இருந்து நீக்குவதாக மத்தியஅரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் 2016 அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதியுடன் வேறு அம்சங்களும் உன்னன என்றும், அறிக்கையில்  உள்ள மற்ற அம்சத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று  விலங்குகள் நலவாரியம் கூறியுள்ளது.

மேலும் பீட்டா அமைப்பும் தமிழகஅரசின் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேலும் ஒரு கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுக்கள் வரும் 30ந்தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.