சென்னை

திரையரங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்வதற்கு திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் கேளிக்கை வரி உயர்வு காரணமாக புதுப் படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி உள்ளது.    திரையரங்கு உரிமையாளர்களும் கட்டண உயர்வு கோரி இருந்தனர்.  இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ 160 ம் மற்ற நகரங்களில் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ. 140 கட்டணமும் வசூலிக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே போல சென்னையை தவிர மற்ற நகரங்களில் ஏ சி வசதி உள்ள திரையரங்குகளில் அதிக பட்சக் கட்டணம் ரூ 140 என்றும் குறந்த பட்சம் ரூ. 50 எனவும் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.  ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ100ம் குறைந்த பட்சம் ரூ.30ம் கட்டணம் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.