குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

மிழக அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000/-   வழங்க உள்ளது

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாகப் பலர் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

அவர்களின் நிவாரணத்துக்காகத் தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இன்று மாலை முதல் 144  தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும்/

ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் 

நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும்

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக 1000 நிவாரணம் வழங்கப்படும்

 கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டு உளளது.

இவ்வாறு கூறினார்.