சென்னை

னைத்து சான்றிதழ்களையும் பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு மின்னணு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழில் தொடங்கி மரணச் சான்றிதழ் வரை தனது வாழ்வில் ஒவ்வொரு கடத்திலும் மனிதன் பல் சான்றிதழ்களை பெறுகிறான். அவை அனைத்தும் வாழ்நாளில் பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் மனிதனுக்கு உள்ளது. அவைகளை முந்தைய காலத்தில் காகித நகல்களாக எடுத்துச் சென்று வந்த மனிதன் தற்போது மொபைல் அல்லது கணினியில் சேமித்து வைக்கிறான்

தற்போது அனைத்து துறையிலும் மின்னணு நுழைந்துள்ளதைப் போல் அரசுத் துறையிலும் மின்னணு நுழைந்துள்ளது. இ மேலாண்மை என அழைக்கப்படும் இ கவர்னஸ் மூலம் அரசின் பல சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பெற மக்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இந்த இ கவர்னஸ் அடிப்படையில் மின்னணு பெட்டகம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் மக்கள் எண் என்னும் ஒரு எண் அளிக்கப்பட உள்ளது. சான்றிதழ்கள் வழங்கும் மென் பொருளில் செய்யப்பட உள்ள சிறு மாறுதல் மூலம் அனைத்து சான்றிதழ்களும் மின்னணு வடிவில் இந்த பெட்டகதில் சேர்ந்து விடும். அதாவது ஒரு குழந்தை பிறந்த உடன் அக்குழந்தைக்கு மக்கள் எண் என்னும் ஒரு தனிப்பட்ட எண் அளிக்கப்படும். அந்த எண் மூலம் முதலில் பிறப்பு சான்றிதழ் பெட்டகத்தில் சேர்க்க்கப்படும். இவ்வாறே ஒவ்வொரு சான்றிதழும் பெட்டகத்தில் சேரும்.

அந்தக் குழந்தைக்கு 5 வயதாகும் போது ஆதார் எண் கொடுப்பப்ட்டு அந்த தகவல் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். அத்துடன் அத ஆதார் எங்கு சேர்க்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் தானாகவே இந்த பெட்டகம் மூலம் ஆதார் இணைக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரியில் ஒரு மாணவர் சேர்க்கப்படும் போது சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. பள்ளி அல்லது கல்லூரிக்கு அந்த சான்றிதழ்களை காண அனுமதி அளித்தால் மட்டும் போதுமானதாகும்.