தமிழ்த்தாத்தா பற்றி தப்புத்தப்பாய் சொல்லிக்கொடுக்கும் தமிழக அரசு

--
உ.வே.சா.

ழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி கண்டெடுத்து அச்சிட்டு நமக்களித்தவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சா.

உதாரணமாக, இவர் தேடிக் கண்டுபிடித்து அச்சிட்டுத் தராவிட்டால், சிலப்பதிகாரம் என்பதையே நாம் அறிந்திருக்க முடியாது. இப்படிப் பல அரும் நூல்களை நாம் படித்தறிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தவர் உ.வே.சா.

இவரது இயற்பெயரே தமிழக அரசு பாடநூலில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்.. இது குறித்து தமிழ் ஆர்வலர் பொ.வேல்சாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை படியுங்கள்:

ஆறாம் வகுப்பு பாடநூலில் தவறான தகவல்கள்

“1. ஆறாம் வகுப்பு பாடநூலில் உ.வே.சாமிநாத ஐயரின் இயற்பெயரான வேங்கடராமன் என்பது பாடநூலில் வேங்கடரத்தினம் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. உ.வே.சாமிநாத ஐயர் எட்டுத்தொகையில் 5 நூல்களை மட்டும் பதிப்பித்தார். கலித்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களை அவர் பதிப்பிக்கவில்லை. பாடநூலில் அவர் எட்டு நூல்களையும் பதிப்பித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. ஏழாம்வகுப்பு பாடநூலில் கால்டுவெல் பிறந்த ஆண்டாக 1815 என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் பிறந்த ஆண்டு 1814 ஆகும்.

நான் தமிழ்ப் பாடநூல்களை மட்டும் தான் பார்த்தேன். மற்ற துறை சார்ந்த நூல்களையும் நாம் கவனிக்க வேண்டும். பிழைகள் இருந்தால் அதைத் திருத்தி கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாடநூல் நிறுவனத்திடம் தெரிவிக்கலாம். புதிதாக வருகின்ற பாடநூல்களில் இத்தகைய பிழைகள் வராமல் பார்த்துகொள்ள வேண்டும்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் வேல்சாமி.

தமிழக அரசு கவனிக்குமா?