சென்னை

மிழக அரசு அறிவித்திருந்த நீட் பயிற்சி மையங்கள் சரிவர இயங்காததால் மாணவர்கள் பெரிதும் துயருற்றுள்ளனர்.

மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அவசியம் என அறிவித்தது.   அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.   அதனால் தமிழக அரசு நீட் தேர்வுப் பயிற்சி மையங்கள் தொடங்கியது.   கடந்த ஜனவரி 27ஆம் தேதி 100ஆக இருந்த நீட் தேர்வு பயிற்சி மையங்களின் என்ணிக்கையை 412 ஆக தமிழக அரசு உயர்த்தியது.

ஆனால் நிதி ஒதுக்கீடு சரியாக செய்யப்படாததாலும், கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததாலும் இந்த பயிற்சி மையங்கள் இயங்கவில்லை.   நேற்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 10 பயிற்சி மையங்களில் ஒரே ஒரு மையத்தில் மட்டுமே பயிற்சி நடைபெற்றது.  அங்கும் மிக மிக குறைந்த மாணவர்களே வந்திருந்தனர்.

சென்னையை விடவே மிக மோசமாக மற்ற மாவட்டங்களின் நிலை உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.   போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் எந்த ஒரு உபகரணமும் வாங்க இயலவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.   அத்துடன் ஆங்கிலவழிக் கல்வி பயின்ற மாணவர்களும், தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கும் ஒன்றாக பாடம் நடத்துவது, செய்முறைத்தேர்வு சரியாக நடத்தாது, சி பி எஸ் இ முறைப் பாடம் போன்ற பல குழறுபடிகளும் இதில் உள்ளதால் சரியாக பயிற்சியில் கவனம் செலுத்த இயலவில்லை என மாணவர்கள் கூறி உள்ளனர்,

தமிழக அரசு இப்போதே திட்டமிட்டு சரியான அளவு நிதி ஒதுக்கி நீட் பயிற்சி மையத்தை சரியாக நடத்தவில்லை எனில் சென்ற ஆண்டு ஏற்பட்டது போலவே இந்த ஆண்டும் பின்னடைவு ஏற்படும் என கல்வியாளர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.