சென்னை

மிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாவை முன்னிட்டு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்க அரசு ஆணை இட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதையொட்டி கிராமப்புற திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.   இதில் பங்கேற்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்க நேர்ந்தது.

இதையொட்டி தமிழக அரசு நாட்டுப்புறக் கலை வாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கியது.   இதையொட்டி தமிழக அரசு ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டும் நிதி வழங்குவதாகவும் புதியதாகப் பதிவு செய்தோருக்கு நிதி உதவி அளிப்பதில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாரியத்தில் புதியதாக சேர்ந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கலாம் எனப் பரிந்துரை செய்தது.  இதையொட்டி தமிழக அரசு ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதில் நாட்டுப்புறக் கலை வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் ரூ.2000 கொரோனா சிறப்பு நிதி வழங்க உத்தரவிட்டுள்ளது.