சென்னை
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை கையகபடுத்த தமிழக அரசு ரூ.67.9 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்தி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் வேதா இல்லம் என்னும் வீட்டில் வசித்து வந்தார்.   இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி ப்ழனிச்சாமி அறிவித்தார்  இதையொட்டி இந்த இடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வ்ருகிறது.  இதற்காக அரசு சார்பில் ஒரு அவசர் சட்டம் பிறப்பிக்கப்ப்டது.
இதை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  ஜெயலலிதா வசித்த இல்லம் நினைவில்லம் ஆக்கபப்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தங்களுக்கு பாதிப்பு உண்டாகும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.   ஆயினும் உயர்நீத்மன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகன் ஆன தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என நீதிமன்ம் அறிவித்தது  இதில் தீபக் இந்த இடம் கையகப்படுத்துவதில் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்காததால் கைகப்படுத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
அத்துடன் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.36 கோடி நிலுவையில் உள்ளதால் வ்ருமான வரித்துறை இல்லத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.   இதனால் தமிழக அர்சு வேதா இல்லத்தை கையகப்படுத்த ரூ.67.9 கோடி இழப்பீடு தொகையை வருஆன வரித்துறைகு செலுத்தி உள்ளது.  அத்துடன் வரி பக்கியான ரூ.36.9 கோடியையும் செலுத்த  முன் வந்துள்ள்து.