சென்னை

த்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005க்கு இணங்க கொரோனா கட்டுப்பாட்டுக்குழு மாற்றி அமைக்கபட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் மத்திய அரசு இரண்டாம் முறையாக மே மாதம் 4 ஆம் தேதி முதல் மேலும் 14 தினங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  இதையொட்டி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி ஒவ்வொரு மாநிலங்களும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் கட்டுப்பட்டுக் குழுக்களை மாற்றி அமைக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.  மேலும் இந்த குழுக்களுக்குத் தலைவராக மத்திய உள்துறைச் செயலர் இருப்பார் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக  அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கோவிட் 19 ஐ கட்டுபடுத்த தேவையான திட்டமிடல் மற்றும் அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் மாற்றி அமைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.