சென்னை நகர எல்லைக்குள் உள்ள ஐடி நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை : அரசு கட்டுப்பாடு

--

சென்னை

மிழக அரசு சென்னை நகருக்குள் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து புதிய கட்டுப்பாடு  விதிகளை அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் கடந்த ஜூன் 19 முதல் 30 வரை ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6 முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டது..

அதன்படி ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடனும் அதிகபட்சமாக 80 ஊழியர்களுடனும் இயங்க அனுமதி அளிக்கபடது.

தற்போது சென்னை நகரக் காவல் சரகத்துக்குள் உள்ள ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை 50% லிருந்து 10% ஆகத் தமிழக அரசு குறைத்துள்ளது.