புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு

சென்னை

கொரோனா பரவுதல் அதிகரித்ததால் புதிய பதவிகள் உருவாக்க விதிக்கப்பட்ட தடையைத் தமிழக அரசு நீக்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகமாக இருந்தது.

இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதையொட்டி தமிழக அரசு அனைத்து துறைகளிலும் புதிய பதவிகள் உருவாக்குவதற்குத் தடை விதித்தது.

மேலும் காலியாக உள்ள பல பணிகளுக்கும் நியமனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கி உள்ளது.

அத்துடன் கொரோனா பணிக்கான முன் நிலை ஊழியர்களை நியமிக்க ஊழியர் குழுவின் ஒப்புதல் தேவை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.