திருப்பூர்

மிழக அரசின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பிய்வர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்  விவரம் இதோ

கொரோனா வைரஸ் இந்தியாவைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.  நாடெங்கும் 75 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களைத் தனிமைப்படுத்துமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.   திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது டிவிட்டரில் வீடியோ மூலம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர், “கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் வெளிநாடு சென்று திரும்பி வந்திருந்தால் அவசியம் உங்கள்  மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு உங்களைப் பற்றி நீங்களே சுய அறிவிப்பு செய்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.   பெரும்பாலான விமான நிலையங்களில் உங்களை இமிக்ரேஷன் முடிந்ததும் சோதித்து அனுப்பி இருப்பார்கள்,

இருந்தாலும் வேறு ஏதாவது விமான நிலையத்தில் இறங்கி அதன்பிறகு வாகனம் மூலம் உங்கள் வந்திருந்தால் உங்களைக் குறித்து நீங்களே சுய அறிவிப்பு செய்தால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும்.  நீங்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். தற்போது நாடெங்கும் கொரோனா பரவுவதைத் தடுக்க முழு முயற்சி செய்து வருகிறோம்.  உங்கள் ஒத்துழைப்பு இப்போது மிகவும் அவசியம் ஆகும்.

பொதுவாக வெளிநாடு சென்று வருவோர் அனைவரையும் நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கவனித்து வருகிறோம்.  அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் சிகிச்சை அளிக்கிறோம்.   இதில் ஒரு சிலர் விடுபட வாய்ப்பு உண்டு.  அவ்வாறு நடைபெறாமல் தடுக்க வெளிநாடு சென்று வந்தவர்கள் தங்கள் பயண விவரங்களை மறக்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.