மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் : விருது பெற்ற மூதாட்டி

துரை

த்திய மாநில அரசு விருதுகள் பெற்ற சின்னப்பிள்ளை தமிழகத்தில் உள்ள அனத்து மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும் என கூறி உள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது பில்லுசேரி என்னும் கிராமம்.  இந்த கிராமத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி சின்னப்பிள்ளை கிராமப் பெண்கள் மேம்பாட்டுக்காக பணி ஆற்றி வருகிறார்.  இவருக்கு  மத்திய அரசின் சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.  அந்த விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இவர் காலில் விழுந்து வணங்கினார்.

தற்போது இவருக்கு தமிழக அரசு வழங்கும் அவ்வையார் விருது அளிக்கப்பட்டுள்ளது.   இந்த விருது மகளிர் பொருளாதார மேம்பாட்டுக்காக இவர் உழைத்ததை ஒட்டி வழங்கப்பட்டுள்ளது.  இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து சின்னப்பிள்ளை பெற்றுக் கொண்டார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் சின்னப்பிள்ளை, “கடந்த 1990 ஆம் வருடம் 4 பெண்களுடன் தொடங்கப்பட்ட களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழ்வில் தற்போது 16 மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் பெண்கள் உள்ளனர்.    கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்துக்காக நான் பாடுபட்டதால் எனக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சக்தி புரஸ்கார் விருது வழங்கினார்.

மாநில முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது மதுக்கடைகள் தான்.  நமது மாநிலத்தில் ஏராளமானோர் மது குடித்து இறக்கின்றார்கள்.  அவசியம் இந்த நிலை மாற வேண்டும்,   அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அரசு முட வேண்டும்.   முதல்வர் விருது வழங்கும் போது அவரிடம் இதை சொல்ல எண்ணினேன்.   ஆனால் அவரிடம் நன்றி மட்டுமே கூற வேண்டும்.  வேறெதுவும் பேசக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.