ஜெயலலிதா 71 ஆவது பிறந்த நாள் : 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் தமிழக அரசு

 

சென்னை

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 71 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தமிழக அரசு அவரது வயதுக்கு ஏற்றபடி மரக்கன்றுகள் நட்டு வருகிறது.   அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது.

 

அதை ஒட்டி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆம்  பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும்.   இதையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்., இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ரூ.10.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed