ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்!

--

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகி உள்ளார்.

விசாரணை ஆணையம் 3 சம்மன் அனுப்பியும்  ஆஜராகாமல் தவிர்த்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து  அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான  விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், பலரிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஜெ.மரணம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில்,  விசாரணைக்கு ஆஜராகுமாறு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி. யுமான தம்பித்துரை ஆகியோருக்கு  ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ், விஜயபாஸ்கருக்கு  3 சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர் கலந்துகொள்ளாத தால், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இன்று விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெ.சிகிச்சையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விசாரணை ஆணையத்தில்,  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கள்  சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி உள்ளார்.