தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா

சென்னை

மிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 இதில் பங்கு பெற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் தற்போது மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மநகாராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் காமராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்,