தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக தேவாசீர்வாதம் மீண்டும் நியமனம்

சென்னை:

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி விட்டுத்தான் சத்தியமூர்த்தி இந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். சத்தியமூர்த்தி தற்போது கட்டாய விடுப்பில் அனுப்ப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக மன்னார்குடி தரப்பு கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு ஜூலை மாதம் உளவுத்துறை ஐஜியாக தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் அவருக்கு பதிலாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

தேவாசீர்வாதம் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சசிகலா தரப்பின் நெருக்கடி காரணமாகத்தான் அப்போது தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.