சென்னை

ற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் மது விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   பல வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மது விலக்கு அமலில் இருந்தது. அதன் பிறகு திமுக ஆட்சியில் மதுவிலக்கு விலக்கப்பட்டு பின் மீண்டும் அமலாக்கப்பட்டது.

அதன் பிறகு அதிமுக ஆட்சியில் மீண்டும் மதுவிலக்கு விலக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதுக்கடைகள் அரசு மயமாக்கப்பட்டு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.  தற்போது ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும் அளவுக்கு நிலை மோசமாகி உள்ளது.

மது விற்பனையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.  தமிழகத்தில் ரூ.29,672 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.   அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் ரூ.15,332 கோடிக்கும் ஆந்திராவில் ரூ. 12,739 கோடிக்கும், தெலுங்கானாவில் ரூ.12,144 கோடிக்கும் விற்பனை ஆகி உள்ளது.

வட இந்திய மாநிலங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,585 கோடி, பஞ்சாப் மாநிலத்தில் ரூ.5,000 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,926 கோடி, அரியானாவில் ரூ.19,703 கோடி,மகாராஷ்டிராவில் ரூ.18000 கோடி விற்பனை ஆகி உள்ளது.