கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழக மாவட்ட வாரியாக பாதிப்புக்குள்ளானவர்களின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், 15 ஆயிரத்து 492 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 211 பேர் மருத்துவ மனைகளில் தனிமையாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும், 86 ஆயிரத்து 644 பயணிகளுக்கு நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 890 பேரிடம் இருந்து சாம்பிள்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், இதில் 757 பேருக்கு நெகட்டிவ் என்றும், 23 பேருக்கு பாசிடிவ் என்றும், 110 சாம்பிள்கள் ஆய்வில் இருந்து வருவதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.